எம்மை வீதியில் போராட விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்

Report Print Suman Suman in சமூகம்

எங்களின் பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காக நாம் வீதியில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், எம்மை வீதியில் விட்டவர்கள் பொங்கி மகிழ்கின்றனர் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 329ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடெங்கிலும் தைப்பொங்களல் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமது நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் கூறுகையில்,

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவினர்களுக்காக வீதியில் இறங்கி நாம் போராடினாலும் எங்களை வீதியில் இறங்கி போராட வைத்தவர்கள் வீடுகளில் இன்று பொங்கி மகிழ்கின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்திற்கு அரசுக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத் தரவேண்டியவர்கள் அரசுக்கு கண்ணை மூடிக்கொண்டு அதரவு வழங்குகின்றனர்.

அத்துடன் அரசுக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது அல்லது அரசுக்கு ஆதரவு தேவைப்படுகின்ற போது நிபந்தனையின்றி ஆதரவு வழங்கி வருகின்றனர்.

நாட்டிற்குள் மட்டுமன்றி நாட்டிற்கு வெளியே சென்றும் எங்களின் பிரதிநிதிகள் அரசுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

எங்களுக்காக பேசுவார்கள் என நம்பிய பிரதிநிதிகள் அரசுக்காக மேடையேறி பேசுகின்றார்கள், வாதாடுகின்றர்கள்.

இவற்றுக்கெல்லாம் இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.