ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்

நாடாளுமன்றத்தில் கலவரமாக நடந்துக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடந்த சம்பவத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் போது பிரதமரின் உரைக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சபையில் பெரும் அமளி ஏற்பட்டதுடன் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினர் பரஸ்பரம் தாக்குதல் நடத்திக்கொண்டனர்.