வவுனியா கோர விபத்து! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்திருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக குருமன்காடு நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியோரத்தில் குவிக்கப்பட்டு இருந்த கற்களுடன் மோதி விபத்துக்குள்ளாகி தடம் புரண்டுள்ளது.

விபத்து சம்பவித்த இடத்திலேயே ஒருவர் மரணமடைந்த நிலையில், இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஒருவர் இன்று அதிகாலை மரணமடைந்துள்ளார்.

ஐந்து பேர் பயணம் செய்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த இருவரை தவிர ஏனைய இருவரையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.