தைப்பொங்கல் தினத்தில் விவசாயிக்கு நேர்ந்த கதி: ஊரே சோகத்தில்

Report Print Rusath in சமூகம்

கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள கற்கிளாச்சோலை பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை ஏழு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஏறாவூர்ப்பற்று, சித்தாண்டி பிரதான வீதியை அண்டி வாழும் தம்பிமுத்து கந்தசாமி (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வயல் பகுதியின் ஊடாக வரும்போது குறுக்கிட்ட காட்டு யானை இவரைத் தாக்கியதில் அவர் தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதுடன், தைப்பொங்கல் தினமான இன்று நேர்ந்துள்ள குறித்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.