வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் களைக்கட்டியுள்ள பொங்கல் திருநாள்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்றைய தினம் பொங்கல் விழா களைகட்டியுள்ளது.

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெகு விமரிசையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த பொங்கல் விழாவில், பேருந்து சாரதிகள், நடத்துனர்கள், உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, வவுனியா புதிய பேருந்து நிலையம் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு ஒரு வருடமாக மூடப்பட்டிருந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வடமாகாண முதலமைச்சரின் முயற்சியால் அண்மையில் இயங்க ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.