கிழக்கில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் இராணுவத்தினர்

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த விசேட பூஜை வழிப்பாடுகள் கிழக்கு மாகாண இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளன.

இதன்போது விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆலய முன்றிலில் இராணுவத்தினரின் விசேட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இனங்களிடையே நல்லுறவினையும் மற்றும் படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவினை ஏற்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க பனேவல உட்பட கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் கட்டளை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.