கேப்பாப்புலவு மக்களின் செயல்? மகிழ்ச்சியடைந்த இராணுவத்தினர்

Report Print Mohan Mohan in சமூகம்

இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் தைத்திருநாள் இன்று முல்லைத்தீவிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

இதன்போது கேப்பாப்புலவு மக்கள் காணிமீட்பு போராட்ட இடத்தில் பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைத்துள்ளனர்.

இதனையடுத்து கேப்பாப்புலவில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினருக்கும் பொங்கலை பகிர்ந்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் இராணுவத்தினரும் மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அத்துடன், கேப்பாப்புலவு மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் விடுவிக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று 320ஆவது நாளாகவும் அப்பகுதி மக்கள் கவனஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

விடுவிக்கப்படாத 104 குடும்பங்களின் 181 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி இந்த போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.