பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மரணம்

Report Print Steephen Steephen in சமூகம்

திஸ்ஸமஹாராமையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட 14 வயது சிறுமி, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுமி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்துள்ளார்.

இவர் காதலித்ததாக கூறப்படும் இளைஞனும், மேலும் இரு இளைஞர்களும் இணைந்து மதுபானம் அருந்தி விட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சிறுமியை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.