சீசெல்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

சீசெல்ஸ் நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 9 இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீசெல்ஸ் நாட்டின் டெனிஸ் தீவுக்கு அருகில் கடந்த டிசம்பர் 20ஆம் திகதி இந்த மீனவர்களை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விக்டோரியா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பபட்டு கடந்த மாதம் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.