இளம் மனைவியை கொலை செய்து கழிப்பறை குழியில் போட்ட கணவன்

Report Print Vethu Vethu in சமூகம்

இளம் மனைவியை கொலை செய்து கழிப்பறை குழியில் போட்ட கணவன் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய ஹம்பேகமுவ பிரதேத்தில் இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் பொலிஸார் விரைவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

23 வயதான காஞ்சனா செவ்வந்தி என்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கொலை செய்யப்பட்டு அவரது சடலம் போடப்பட்ட இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.