வலுப்பெற்றது சைட்டம் பிரச்சினை

Report Print Sujitha Sri in சமூகம்

பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாவினால் வழங்கப்பட்ட இறுதி தீர்மானத்தின் படி இது தொடர்பான பிரச்சினை வலுப்பெற்றுள்ளதாக மாலபே தனியார் மருத்துவ கல்லுரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்துடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கத்தின் இணைப்பாளர் கெமுனு விஜேரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,

எமது பிள்ளைகளுக்கு மருத்துவ பட்டத்தை வழங்கியதன் பின்பு அதை வழங்கிய நிறுவனத்தை மூடினால் வழங்கப்பட்ட மருத்துவ பட்டத்திற்கு எந்த விதமான பெறுமதியும் இல்லை.

கலைக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பட்டத்தை வைத்துக் கொண்டு எங்கள் பிள்ளைகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது பாரியதொரு பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.