முன்னாள் பிரதி அமைச்சரின் மகள் திடீரென மரணம்

Report Print Vethu Vethu in சமூகம்

பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சிறிபால கம்லத்தின் மகள் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளார்.

ரஞ்சலா கம்பத் இலேபெரும என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிசிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவரது வயது 35 ஆகும். ரஞ்சலா இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார்.

உயிரிழந்த ரஞ்சலா கம்லத்தின் உடல் கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.