கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் நினைவு தினம் புதுக்குடியிருப்பில் அனுஸ்டிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 25ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று புதுக்குடியிருப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் மகளிர் பிரிவினை சேர்ந்த ராதா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தி உள்ளார்கள்.

இதில் நினைவுரைகளை ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பகுதி வேட்பாளர் ஜனமேனத் ஆகியோர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.