யாழ். மிருசுவில் புகையிரத நிலையத்தில் இன்றைய தினம் 6 கிலோ கிராம் கஞ்சா, கொடிகாமம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.