விடுதலைப்புலிகளின் இலட்சினையை பயன்படுத்தியவர்களுக்கு நீதவான் கொடுத்த உத்தரவு?

Report Print Sujitha Sri in சமூகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படம் மற்றும் அவர்களது இலட்சினை என்பவற்றை பயன்படுத்தி புதுவருட வாழ்த்து தெரிவித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதவான் இருவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் படம் மற்றும் இலட்சினை என்பவற்றை பயன்படுத்தி முகநூலில் புதுவருட வாழ்த்து செய்தி பதிவிட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.