608 மயக்க மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

மருதானை, விபுலசேன மாவத்தை பகுதியில் மயக்க மருந்து ஒரு தொகையினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 608 மயக்க மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.