யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர் இன் பிறந்தநாள் கொண்டாட்டம்

Report Print Sumi in சமூகம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் 101ஆவது பிறந்ததினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலைக்கு அருகில் குறித்த பிறந்ததின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, யாழ். இந்திய துணைத்தூதுவர் யு.நடராஜன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் இன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்திலுள்ள எம்.ஜி.ஆர் ரசிகர்களினால் அப்பகுதி முதியவர்களுக்கு சில உதவிப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.