கிராமத்தில் புகுந்து தொல்லை செய்யும் யானைகள்

Report Print Navoj in சமூகம்

ஓட்டமாவடிக் கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து விட்டதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உசன்போடி ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள அரிசி ஆலைக்குள் இன்றைய தினம் அதிகாலை நுழைந்த யானைகள் நெற்கதிர்களை சேதப்படுத்தியுள்ளன.

இதன்போது, அரிசி ஆலையின் காவலாளி எழுப்பிய சத்தத்தில் அங்கு வந்த அயலவர்களின் உதவியுடன் யானைகள் விரட்டப்பட்டுள்ளன.

இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

இதேவேளை, இவ்வாறு தொடர்ந்து யானைகள் கிராமத்திற்குள் வருவதால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனை உடனடியாக தடுக்கும் வகையில் அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறித்த கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Latest Offers