ரோஹித்தவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாடு செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.

தனது சம்பளம் மற்றும் வருமானத்தை மீறி பணம் மற்றும் சொத்துக்களை சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டில், இலஞ்ச ஆணைக்குழு, ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

எனினும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் மார்ச் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்துக்கொள்ள வெளிநாடு செல்ல நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்ன அனுமதி கோரியிருந்தார்.

இந்த நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதனிடையே வெளிநாடு செல்ல நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவின் கோரிக்கையும் இன்று ஆராய்ப்பட்டது.

அப்போது வீசாவை பெற்றுக்கொள்ள கடவுச்சீட்டை வழங்குவதற்கு எதிர்ப்பை வெளியிடப்பட போவதில்லை என அரச சட்டத்தரணி கூறினார்.

மேலும் வெளிநாடு செல்லும் கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை எதிர்வரும் 26ஆம் திகதி தெரியப்படுத்துவதாகவும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

அரசு சொந்தமான 39 இலட்சம் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.