மடு வீதியில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

Report Print N.Jeyakanthan in சமூகம்

மடு பிரதான வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு அப்பகுதி மக்களும், மடு பகுதிக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வீதியில் யானை உள்ளிட்ட பல காட்டு விலங்குகள் இரவு நேரங்களில் வீதிக்கு வந்து செல்வதால் அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் அப்பகுதியினூடே செல்லும் வாகனங்களில் மோதுண்டு பல காட்டு விலங்குகள் உயிரிழக்கின்றன எனவும் அப்பகுதியினர் குறிப்பிடுகின்றனர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச சபை வெகு விரைவில் கவனத்திற்கொண்டு பயணம் செய்யும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.