ஆசிரியர் ஒருவர் செய்த மோசமான காரியம்!

Report Print Nivetha in சமூகம்

கண்டியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர், பாடசாலையில் மாணவரை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தினை இலஞ்சம் பெற்றமையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் வழங்கிய பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய நேற்றைய தினம் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாம் தரத்திற்கு மாணவரை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதுடன், பாடசாலைக்கு மாணவன் சேர்த்துக் கொள்ளப்படாவிடின் பணத்தினை திருப்பி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு பணத்தினை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், பணம் திரும்ப வழங்கப்படவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்றைய தினம் ஆசிரியரை கைது செய்துள்ளதுடன், மேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.