தாயின் தொண்டைக்குள் செல்போனை போட்டு இறுக்கி கொலை செய்த மகன்

Report Print Steephen Steephen in சமூகம்

தாயின் தொண்டைக்குள் செல்போனைச் செலுத்தி, மூச்சடைக்கச் செய்து தாயை கொலை செய்ததாக கூறப்படும் மகனை ஊவா பரணகம பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஊவா பரணகம மொரகொல்ல உமானதி கிராமத்தில் வசித்து வந்த ரத்நாயக்க முதியான்சலாகே கருணாவதி என்ற 61 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக சந்தேக நபரான மகன் நேற்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இரவு தானும் மனைவியும் வீட்டில் புறப்பட்டு சென்று மறுநாள் வீட்டுக்கு வந்த போது தாய் படுக்கையில் இறந்து கிடந்ததாக மகன் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனினும், இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என கருதி நீதவான் விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், இதற்கு அமைய பதுளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேதப் பரிசோதனை நடத்தியுள்ளார்.

மூச்சை இறுக்கியதால், மரணம் சம்பவித்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, செல்போனை தொண்டைக்குள் போட்டு இறுக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.