பருத்தித்துறை இளைஞனின் பாதக செயல்! நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இளைஞனுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் கடூழியச் சிறைச் தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தண்டனையை நேற்று வழங்கினார்.

பருத்தித்துறைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2011ஆம் ஆண்டு, சிறுமியை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று சந்தேகநபர் குற்றம் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுப் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர் தன்மீதான குற்றத்தை ஏற்றுக் கொண்டார். அதனையடுத்து கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் முறைகேடு புரிந்தமை ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா இரண்டு வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவற்றைச் செலுத்தத் தவறின் மேலும் ஒரு மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், சிறுமிக்கு இழப்பீடாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் எனவும் உத்தர விடப்பட்டது.

இழப்பீடு செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் அவர் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.