தமிழ் மொழியையும் கொலை செய்கிறதா இராணுவம்?

Report Print N.Jeyakanthan in சமூகம்

இராணுவ முகாம் ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் தமிழில் எழுதப்பட்ட விதம் குறித்து தமிழ் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பூநகரியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலே குறித்த பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பெயர் பலகையில் “உடபிரவேசிப்பது தவைரயறுக்கப்பட பிரதேசம“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தமிழ் எழுத்துப் பிழையும், சொற் பிழையும் காணப்படுகின்றது.

“உட் புகுந்து என்ன சொற்றொடர்” என்றே புரியவில்லை. இவ்வாறான பெயர்ப் பலகைகளை பார்க்கும்போது எம்மை முகச்சுழிப்படைய செய்வதுடன், கோபமடையச் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.