இலங்கை, இந்திய துணைத்தூதுவரை பாராட்டும் நிகழ்வு

Report Print Sumi in சமூகம்

இலங்கை, இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ஆறுமுகம் நடராஜானுக்கும், 4 தசாப்தங்கள் சமுதாய கல்வியில் அர்ப்பணிப்புச் செய்த கந்தையா சிவராசா ஆகிய இருவருக்குமான சேவை நயப்பு பாராட்டும், விருந்துபசாரமும் யாழில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு யாழ்.நண்பர்களின் ஏற்பாட்டில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிதம்பர மோகன் தலைமையில் யாழ்.மானிப்பாய் விருந்தினர் விடுதியில் இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராக கலந்த கொண்டு, இந்திய துணைத்தூதுவருக்கான கௌரவத்தினை வழங்கி வைத்துள்ளார்.

மேலும், நிகழ்வில், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் மறவன்புலோ சச்சிதானந்தம் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

Latest Offers