கிளிநொச்சியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17) பாடசாலையில் இடம்பெற்றது.

க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 53 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, இதில் நான்கு மாணவர்கள் விசேட சித்தியடைந்துள்ளனர்.

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்துள்ளனர்.

Latest Offers