இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்

Report Print Kumar in சமூகம்

இலங்கையில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதற்கு கனடா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கென்னென் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கென்னென் விஜயம் செய்துள்ளார்.

இதன்போது, உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யில் உள்ள விசேட தேவையுடைய மாணவர்கள் மேற்கொண்டுவரும் கல்வி நடவடிக்கைகளை பார்வையிட்டுள்ளார்.

வாய்பேச முடியாத பிள்ளைகளுக்கு தொழில் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக கனடிய பல்கலைக்கழகம் ஊடாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்போது விசேட தேவையுடைய பிள்ளைகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்து கொண்ட அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் குலோபல் பெயார் கனடாவின் இலங்கைக்கான பணிப்பாளர் குளோரியா விஸ்பன், கனடா தூதரகத்தின் அபிவிருத்தி மற்றும் உதவி பிரிவின் ஆலோசகர் கலோட் கௌல்ட் மற்றும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers