பரிதாபமாக பலியாகிய முதியவர்!

Report Print Mubarak in சமூகம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் கட்டு வெடியில் சிக்குண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் நேர்ந்துள்ளது. தான் வைத்த கட்டுத்துவக்கில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் வழமையாக கட்டுத்துவக்கு வைத்து மிருகங்களை வேட்டையாடி வருபவர் எனவும் காட்டுக்கு போனவர் வீட்டுக்கு வராத நிலையில் அவரை தேடிச்சென்ற போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த தினயாகே சிறிவர்தன (57 வயது) என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் காட்டில் காணப்படுவதாகவும் விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருன்றனர்.