யாழில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சிறுமி! காரணம் வெளியானது

Report Print Sumi in சமூகம்

குடும்ப தகராறு காரணமாகவே, யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

எனினும், பணப் பிரச்சினை காரணமாகவே இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதென உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் இன்று காலை சிறுமி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதுடன், மற்றும் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் 3 வயதான தனுசன் நிக்சையா என்ற குழந்தை உயிரிழந்துள்ளதுடன், 55 வயதுடைய பலமேஷ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

மேலும், சம்பவத்தை மேற்கொண்டதாக கூறப்படும் 33 வயதான ஈஸ்வர் என்ற நபர் நஞ்சருத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்டவர், குறித்த தாயின் மூத்த மகன் எனவும், இவர் தனது மகள் முறையான சகோதரனின் மகளையும், தாயையும் கொடூரமாக வெட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாகவே,சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது.

எனினும், பணப் பிரச்சினை காரணமாக இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதென உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபர் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளதாகவும், பணம் கொடுக்காத காரணத்தினாலேயே சிறுமியை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ததாக கூறப்படும் நபர் வீட்டிற்கு வருவதில்லை எனவும், எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் இருப்பவர்களிடம் சண்டையிடுவார் என அயலவர்கள் தெரிவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், சம்பவம் இடம்பெற்றமைக்கான உறுதியான காரணங்களை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.