இலங்கையில் யோகாசனத்தில் ஈடுபட்ட ஐ.நா முக்கியஸ்தர்

Report Print Ajith Ajith in சமூகம்

விருதுபெற்ற ஹொலிவுட் நடிகையும், எழுத்தாளரும் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நல்லெண்ணத் தூதுவருமான ஹஸ்லே ஜுட் (Ashley Judd) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் தாம் யோகாசனத்தில் ஈடுபடும் புகைப்படத்தை அவர் தமது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டர்கிராம் தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தமது பயணத்தில் அவர், சமூகத்தில் பல்வேறு மட்டங்களிலும் உள்ள பெண்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பால்நிலை ரீதியாக எதிர்கொள்ளும் வன்முறைகள் குறித்து ஆராய உள்ளதாக ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சுகாதாரத் துறை அவர் பொது மற்றும் தமற்றும் பொதுமக்களின் உரிமைகள் என்பன தொடர்பில், பொது மற்றும் தனியார் துறை பங்காளர்களையும், நன்கொடையாளர்கள் தரப்பினரையும் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜுட் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.