யானை தாக்கியதால் தேரர் உயிரிழக்கவில்லை?

Report Print Sujitha Sri in சமூகம்

யானை தாக்குதலுக்கு இலக்கான பெல்லன்வில விமலரத்ன தேரர் நேற்றைய தினம் காலமானார்.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமாகியிருந்தார்.

இந்த நிலையில் பெல்லன்வில விமலரத்ன தேரர் மாரமைப்பு ஏற்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்திய அதிகாரி பீ.பீ. தசநாயக்க தெரிவித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், யானை தாக்குதலுக்கு இலக்கான தேரர் முதுகில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

இதனையடுத்தே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளமையானது பிரேத பரிசோதனையில் தெளிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.