நான்கு கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

Report Print Mubarak in சமூகம்

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திருகோணமலை சிறைச்சாலையில் நான்கு சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு இன்று சிறைச்சாலை அத்தியட்சகர் ரஜீவ சிறிமால் சில்வா தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத மூன்று ஆண் கைதிகளும், பெண் கைதி ஒருவருமாக நான்கு கைதிகளே இதன் போது விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதன் போது சிறைச்சாலை பிரதான ஜெயிலர் ஜே.ஏ.பி.ஆர்.சஞ்ஞீவ,புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள்,மற்றும் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.