சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள்! இப்படிக்கு சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் போதும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 346ஆவது நாளாகவும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 70ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 70ஆவது சுதந்திர தினத்தினை கொண்டாடும் இலங்கை சிங்கள மக்களுக்கு வாழ்த்துக்கள். இப்படிக்கு தொடர்ந்தும் சுதந்திரத்திற்காக போராடும் தமிழர்கள் என வாசகம் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியிருந்தனர்.

அத்துடன், தமிழ் யுத்த கைதிகள் இன்றும் இலங்கை சிறையில்.., தமிழர்களை கடத்தவும் சிறையில் வைக்கவும் உருவானதே பயங்கரவாத தடைச்சட்டம் என்ற வாசகங்களும் குறித்த பதாதையில் பொறிக்கப்பட்டிருந்தன.