வீட்டு வாசலில் அர்ஜூன் அலோசியஸின் மனைவி குழப்பம்

Report Print Shalini in சமூகம்
வீட்டு வாசலில் அர்ஜூன் அலோசியஸின் மனைவி குழப்பம்

பேச்பர்ச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்ட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வித முன்னறிவித்தலும் இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அதிகாலையில் திடீரென மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அர்ஜூன் அலோசியஸை கைது செய்து அழைத்துச் செல்லும் போது அவருடைய மனைவி ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்துள்ளார்.

புகைப்படக்கலைஞர் ஒருவரின் கெமராவை தட்டி விட முயன்றதுடன், அர்ஜூன் அலோசியஸ் சென்ற வாகனத்தை சுற்றி வந்து சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதையடுத்து அர்ஜூன் அலோசியஸின் மனைவியை அவரது உறவினர் ஒருவர் சமாதானப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச்சென்றுள்ளார்.