அரசியல்வாதியின் கார் மீது அழுகிய முட்டை வீச்சு தாக்குதல்

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தறை உயன்வத்தை பிரதேசத்தில் பிரபல அரசாங்கத்தின் அரசியல்வாதியை இலக்கு வைத்து நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அரசியல்வாதி மாத்தறை மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளரின் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பும் வழியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள பழைய கட்டடம் ஒன்றில் இருளில் இருந்தவாறு அரசியல்வாதியின் கார் மீது அழுகிய முட்டை வீசப்பட்டுள்ளது.

உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சிறிது நேரம் பயணத்தை நிறுத்தி விட்டு சோதனை நடத்தி விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

முட்டை வீசப்பட்ட இடம் நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் அரச கட்டடமாகும். இந்த கட்டடத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால், கட்டடத்தை மீண்டும் திருத்தி அதனை பயன்படுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதியின் கார் மீது அழுகிய முட்டை வீசியது யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.