வேட்பாளரின் கடையை உடைத்துக் கொண்டு சென்ற பவுசர்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நோர்வூட் நகரில் பால் பவுசர் ஒன்று ஐக்கிய தேசிய முன்னணியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கடை ஒன்றினை உடைத்துத் கொண்டு விபத்துக்குள்ளானதில் கடை சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கடையில் உள்ளவர்கள் வீட்டில் இருந்ததால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

சம்பவத்தில் கடையின் பொருட்கள் மற்றும் கடை சேதமடைந்துள்ளன. இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.