களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்

Report Print Rusath in சமூகம்

இலங்கையின் 70ஆவது ஆண்டு சுதந்திர தின நிகழ்வுகள் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

முதலில் உதவிப்பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் தேசியகொடியை ஏற்றிவைத்தார்.

இதன்போது, சுதந்திர தினத்தின் மகிமை, சுதந்திர தினத்தின் வாழ்த்துச் செய்தியையும் உதவிப்பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக பிரதேச வளாகத்தில் பழமரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் வீ.தவேந்திரன், திட்டமிடல் பணிப்பாளர் அ.பாக்கியராசா,சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் வே.வரதராஜன், உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.