கேப்பாப்புலவில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை

Report Print Shalini in சமூகம்

இலங்கையின் சுதந்திர தினமான இன்று கேப்பாப்புலவில் இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

339 ஆவது நாளாக தங்கள் வாழ்விடங்களை விடுவிக்ககோரி பேராட்டம் நடத்திவரும் கேப்பாப்புலவு மக்கள், முருகன் கோவிலுக்கு நடைபவனியாக சென்றுள்ளனர்.

இதன்போது போராட்டக்காரர்களை மறித்த பொலிஸார், அவர்கள் கொண்டுசென்ற பதாதைகளை பறித்து தகாத வார்த்தைகளால் கடுமையாக எச்சரித்து விடப்பட்டுள்ளார்கள்.

மேலும், இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை தாம் புறக்கணிப்பதாக கேப்பாப்புலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த போராட்டத்தில் அதிகளவான சிறுவர்கள் கலந்து கொண்டதுடன், வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்ததுடன், மக்களது காணிகளில் இருக்கும் இராணுவத்துடன் தர்க்கம் புரிந்துள்ளனர்.