காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் ஆர்ப்பாட்டம்

Report Print Mubarak in சமூகம்

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் 340 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளை இன்றைய தினம் நாட்டின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் உறவினர்களை தேடி தருமாறும் கோரிக்கை விடுப்பதுடன் நீதி நியாயத்தை சர்வதேச சமூகமாவது பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.