அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன ஆகியோருக்கு விளக்கமறியல்!

Report Print Murali Murali in சமூகம்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த இருவரையும் நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த இருவரும் சற்று முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் போது நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.