சுதந்திர தினத்தை புறக்கணித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கறுப்பு உடையணிந்து 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது, கடந்த 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் எமக்கு எந்த தீர்வும் கிடைக்க வில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், இம்முறை இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்து கறுப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.