ஐந்து வாகனங்களை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற மாணவர் கைது!

Report Print Aasim in சமூகம்

பாதையோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களை மோதித் தள்ளிவிட்டுத் தப்பிச் சென்ற நபரொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் மத்தேகொட வீடமைப்புத் திட்டத்தின் அருகில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஐந்து வாகனங்களை மோதித் தள்ளிய கார் ஒன்று அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தது.

இந்நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தபோது விபத்தினை ஏற்படுத்தி தப்பிச் சென்றவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் விபரம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளதுடன், பொலிஸ் காவலில் தொடர்ந்தும் சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 18 வயதேயான ஒரு மாணவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.