கொழும்பு - வெள்ளவத்தையில் பணிபுரிந்த இளைஞருக்கு நடந்த விபரீதம்!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு - வௌ்ளவத்தை பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மொரகல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞர், உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.