வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்
277Shares

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பொலிஸ் அதிகாரியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து மன்றுக்கு உரிய பதில் கிடைக்க வில்லை என நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நபர், வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ட்ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.