ஐ.நா அமைதிகாக்கும் பணிகளுக்காக லெபனான் செல்லும் இலங்கை இராணுவம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை இராணுவத்தின் குழுவொன்று லெபனான் செல்லவுள்ளது.

12ஆவது பாதுகாப்பு படையே இவ்வாறு லெபனான் பயணமாகவுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு படைப் பிரிவில் 10 அதிகாரிகள் மற்றும் 140 படையினர் போன்றோர் இலங்கை சிங்கப் படையணி, இலங்கை பொறியியலாளர்ப் படையணி, இயந்திரவியல் காலாட் படையணி, கொமாண்டோ படையணி, விசேட படையணி, பொறியியலாளர் சேவைப் படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இலங்கை மின்சாரவியல் மற்றும் பொறியியல் படையணி,

இலங்கை இராணுவ போர்கருவிப் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் சேவைப் படையணி, மற்றும் இராணுவ ஜெனரல் சேவைப் படையணி போன்ற படையணிகளை முன்னிலைப்படுத்தி கலந்து கொள்வதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இதன் முதல் தரப்பினர் (ஏழு அதிகாரிகள் உள்ளடங்களாக கட்டளை அதிகாரிகள் மற்றும் நாற்பத்து மூன்று படையினர்) பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்.

இந்தக் குழுவிற்கான கட்டளை தளபதியான சிங்கப் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் ஆர் டபிள்யூ. கே. ஹேவகே மற்றும் படையினர் 2018ஆம் ஆண்டு பெப்ரவரி 18-19 முதல் 6 மார்ச் வரை பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

லெபனான் நாட்டின் பாதுகாப்பு சேவைகள் நக்குரா எனும் பிரசேத்தில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெறுகின்றது.

2010ஆம் ஆண்டு இலங்கை இராணுவமானது 11 படையினரை லெபனான் நாட்டின் சேவைக்காக வழங்கியிருந்தது. இவை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் இலங்கை இராணுவமானது 2010ஆம் ஆண்டு ஒரு நபரை அனுப்பிவைத்தது.

அந்த வகையில் முதல் இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் படைவீரர் 2012ஆம் ஆண்டு அனுப்பிவைக்கப்பட்டதுடன் இதன் இரண்டாம் கட்ட பகுதியே இதுவாகும் என இராணுவம் தெரிவித்துள்ளது.