யாழில் கோர விபத்தில் கொல்லப்பட்ட மாணவி - சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Report Print Vethu Vethu in சமூகம்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி உயிரிழந்திருந்தார்.

கடந்த மாதம் 24ஆம் திகதி ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்ற மாணவி ஸ்தலத்தில் உயிரிழந்திருந்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பவள் கவசவாகன கடற்படை சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டார்.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிவான் மன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று எடுத்து கொள்ளப்பட்டது.

குறித்த மாணவியின் மாமனார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

குறித்த வழக்கில் சாரதியான கடற்படை சிப்பாயும், மாணவியின் மாமனாரும் இணைக்கப்பட்டு உள்ளமையால், அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது எனும் நோக்கம் மன்றுக்கு உள்ளது. மாமனாருக்கு பிணை வழங்கப்படும்போது என்ன பிணை நிபந்தனைகள் உள்ளனவோ அதே பிணை நிபந்தனைகளுடன் சாரதியும் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுகின்றார் என நீதிவான் தெரிவித்தார்.