பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நால்வருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

அரலங்கல பிரதேசத்தில் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளுக்கு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 4 பேருக்கும் பொலன்னறுவை மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக 14 ஆண்டுகள் நடந்து வந்த நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இழப்பீட்டை செலுத்த தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

பெலஹிட்டியாவ பிரதேசத்தை சேர்ந்த நான்கு பேருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.