சிலாவத்துறையில் 160 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

மன்னார் - சிலாவத்துறை சவரியபுரம் பிரதேசத்தில் 160 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரிவின் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கஞ்சா போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என மன்னார் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும், கைதுசெய்யப்பட்ட நபர்கள் இன்றைய தினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.