கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் - ஒருவர் கைது

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் சுயேட்சைக் குழுவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற சுயாதீனச் செய்தியாளர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவதூறாக பேசி வெளியேற்றிய சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் கிளிநொச்சியில் போட்டியிடுகின்ற கட்சிகளினதும் சுயேட்சைக் குழுவினதும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்திலும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பான சுயேட்சைக்குழுவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திலும் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

இதன்போது சுயேட்சைக்குழுவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது குழுவின் ஆதரவாளரான வி. சந்திரதாஸ் என்பவர் தாக்குதல் மேற்கொண்டு அவதூறாக பேசியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து கிளிநொச்சி பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.