வாகரையில் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு, வாகரை பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினரால் நேற்று மாலை கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் உதவி ஆணையாளர் என்.சுசாதரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின்போதே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகரை கட்டுமுறிவுக்குளம் ஆகிய பகுதியில் இன்று முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் உதவி ஆணையாளர் என்.சுசாதரன் தெரிவித்தார்.

இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் 7900 லீற்றர் கோடா ஏழு பரல்களில் இருந்து இரு இடங்களிலும் இருந்து மீட்கப்பட்டதாகவும் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.